கழுகு
தட்டு தடுமாறிய
பாம்பொன்றாய்
ஊர்ந்து கொண்டிருந்த
பழைய நினைவுகளை
கூண்டில் அடைக்கவே
பறந்து கொண்டிருந்தது
வயதான கழுகொன்று.....
மேட்டாங்காட்டு
மொட்டை மரத்தினடியில்
நிழல்களாய் மாறிப் போன
என கனவுகளை
யாராவது
திருடிச் செல்லுங்கள்...
திருடுவது சுலபமல்ல என்பவர்கள்
இறகொன்றையாவது
உதிர்த்திடுங்கள்...
வயதாகி வாழ்வது
மொட்டை மரத்தை தூக்கி சுமப்பது.....
பாரம் தாங்கவில்லை
தூரம் குறையவில்லை....