மாமதுரை மீனாட்சி

மா மதுரைக்கரசி , மங்கையர்க்கரசி,
மா மதுரை மீனாட்சி.

ஊர் அழகு, பேர் அழகு,
வீதியின் பெயர்களெல்லாம் அழகு,
கோயில் அழகு,
சுற்றி வரும் தேர் அழகு,
கோபுரங்கள் அழகு,
பொற்றாமரை குளம் அழகு,
அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடி வீதி அழகு.

அன்னை மீனாட்சியே,
நித்தம் , உன் பாதம் பணிந்து,
நீ படியளக்கும் கருணையாலே,
உன் கருணை விழி பட்டு,
பரிதவிக்கும் உள்ளமெல்லாம்,
களிப்படையுமம்மா.

விழியாலே மொழி பேசி,
வேறுபடும் மக்களுக்கு,
விருந்தாகும் உன் கருணையம்மா.
மெய்மறந்து கண் மூடி இருக்க,
உன் கொஞ்சும் அழகு கண்ணில் நிற்குதம்மா.

ஒளி வளர் விளக்கே,
உவந்தளிக்கும் மனமே ,
உன் பாதங்கள் சரணம்.

எழுதியவர் : arsm1952 (27-Dec-13, 6:50 pm)
பார்வை : 1720

மேலே