மார்கழி மாதம்
மார்கழி மாதம்
மட்டும் இல்லை
ஆறிரு மாதம்
பொழுதொரு வண்ணம்
செஞ்சுடர் வானில்
எழுந்திடும் காலம்
வாயிற் பக்கம்
சென்றிடும் நேரம்
நறுமணம் வீசும்
நாளும் நாளும்
பூத்துக் குலுங்கும்
மலர்கள் தானோ
என்று நீவீர்
நினைத்திட வேண்டாம்
கூவம் போலொரு
நதியும் இங்கு
வாயிற் படியில்
ஓடுது கண்டு
வாடிடும் மனதை
தேற்றிடு வார்யார்
மாதா மாதம்
ஆயிரம் ரூபாய்
வாங்கிய பின்னும்
கழிவு நீர் கசிந்து
தேங்கி நிற்கும்
காட்சியைக் கண்டு
ஆட்சியில் இருப்பவர்
பார்த்ததை ரசித்து
ஆனந்தம் கொண்டால்
பார்போர் அனைவரும்
பரிகசித்தாலும்
பாவியர் நெஞ்சம்
பதறுது காணோம்
அஞ்சா நெஞ்சம்
உள்ளவர் இவர்போல்
ஆட்சியில் இருந்தால்
காட்சிகள் மாறா !!
ஆக்கம் : 28/12/2013
This "kavithai" precisely describes the sorry state of affairs in our apartments.