புதுப்புறம் நானூறு 5
5. தாயும் அரசனும்
எருமை போல் கருநிரம் கொண்டு
ஏற்றமுடைய பாறைகள் நிறைந்த
ஏற்ற இடத்தில் மான்போல் யானைகள்
எங்கும் உலவிடும் காடுடைய தலைவனே !
அன்பும் பண்பும் பண்பால் வருகின்ற
அருளும் பொருளும் நீங்கிய
அறிவிலாவதர்களை விட்டுக் குழந்தை
அகலத் தாயவள் வினைசெய் வதுபோல்
உந்தன் நாட்டையும் மக்கள் தன்னையும்
உயிர்போல் காத்தருள்க !ஏனெனில்
உன்போல் அரசன் ஆகுதல் எளிதல்ல
உண்மை இதுவே ! உலகத்துத் தலைவா!
திணை : பாடான்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
பாடியவர் : நரி வெரூஉத் தலையார்
பாடப் பட்டவர் : சேரமான் கருவூரேறிய ஒள்வாட்
கொபெருஞ் சேரல்
விவேக்பாரதி