என்ன ஒரு வில்லத்தனம்

ஐஓபி பேங்க் செக் ஒண்ணு கைல இருந்துச்சி ...
என்னோட அக்கவுண்ட் ஐபி யில ...
உடனடியா பணமும் தேவை ...
"சார் ... நான் இன்னைக்கு செக் கொடுத்தா எப்ப சார் கலெக்ஷன் ஆகி வரும்?"
என்கொயரி கவுண்டர்ல இருந்தவரிடம் கேட்டேன்.
"மூணு நாள் ஆகும்"
"சார் ... ஐஓபி பேங்க் பக்கத்து பில்டிங்ல தானே சார் இருக்கு ... அது எப்படி சார் மூணு நாளாகும்? ... நீங்க சொன்னீங்கன்னா நானே கொண்டு போய் கொடுத்திடுறேன் ... இன்னைக்கு பணம் கிடைக்குமா?"ன்னு கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்,
"எல்லாத்துக்கும் ஒருவழிமுறை இருக்குது சார் ... இப்ப நீங்க சுடுகாட்டுக்கு பக்கத்தில் செத்துப்போனா அப்படியேவா காரியத்த முடிப்பாங்க? வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஆகவேண்டியத பார்க்கறதில்ல, அதுமாதிரித்தான்"
பரமா ... ஒரு செக்குக்கு சாவு பயத்தை காட்டிடாங்க பரமா..!
#படித்ததில் பிடித்தது