தேடல்

எனக்குள் தொலைந்த என்
நம்பிக்கையை தேடினேன்!!!
எழுத்துகளில் கதை சொல்ல
மொழி தேடினேன் !!!
நிலவில் இருந்து உலகம் ரசிக்க
வாய்ப்பு தேடினேன் !!!!
பிள்ளை வயதில் மீண்டும் வாழ
புன்னகை தேடினேன் !!!
கண்ணீரோடு கலங்கும் குழந்தையின்
சிரிப்பை தேடினேன் !!!
என்னுள் உள்ள என் தாயின்
நினைவை தேடினேன்!!!!
அன்புக்கு ஆதாரமான நம்
நட்பை தேடினேன்!!!
கண் கலங்குவதால் கண்ணீருக்கு
அர்த்தம் தேடினேன்!!!
என் உயிரினும் மேலான என்
தாய் நாட்டை தேடினேன்...நாங்கள்
அகதிகளை அலைவதால் ...!!!
என் தேடல் தொடரும் தேடியவை
கிடைக்கும் வரை...!!!
-அன்புடன் பார்தீ