காற்றாடி

காற்றாடி
----------------

வண்ண வண்ண காற்றாடி

வால் நீண்ட காற்றாடி

வானை நோக்கி பறக்குது

மேலும் கீழும் குதிக்குது

அசைந்து அசைந்து ஆடுது

காற்றின் வேகம் சொல்லுது

நேர்த்தியாக உச்சியை அடைந்ததும்

படகு போல மிதக்குது

வானம்பாடி என்று எண்ணி

இறுமாப்பில் மிதக்குது

காற்றும் சற்றே நின்றது

வேகமாக கீழிறங்கி காற்றாடி

தரையில் குத்தி சிதைந்தது

காற்றாடி பயணத்தில்

மனித வாழ்கை புரியுது

எழுதியவர் : tamizpithan (29-Dec-13, 11:18 am)
Tanglish : kaatraadi
பார்வை : 117

மேலே