புதுப்புறம் நானூறு 6
6.ஞாயிறு திங்கள் போன்றவன்
வடக்கில் இமயமும் தெற்கில் கண்ணியாரும்
வங்கக் கடல் உந்தன் கிழக்கிலும் எல்லைகளாக
வானிலும் மண்ணிலும் நின்புகழ் ஓங்கி
சொர்க்க நரகத்திலும்
சொலிசொலித்து மின்னுகிறது
படைகளும் உன் குடிகளும்
பஞ்சம் காணாமல் வாழ்கிறது
பாண்டியனே பகைவன் உன்னை
பாவம்போல் சரன்புகுவான்
பெருந்துயருடன் வந்தவனுக்கு
பெருஞ்சோறு பல அளித்து
பெருமையுடன் செல்பவன் நீ !
முக்கண்ணன் கோயில்களில் மட்டுமே
முழுமையான உன் குடைகள்
முதல் முறையாய் சாயட்டும்
முதல்வனே ! உந்தன் கோபங்கள்
தேவியரின் புன்னகையால்
தேகம்விட்டு தனியட்டும்
தேவர்கள் போல் அடக்கமும் அன்பும்
தேன்போல் இன்சுவை மொழியும் கொண்டு
தேர்மீது உலவிடும் தார் வேந்தனே !
குளிர் நிலவு ஒளிபோல் நீயும்
குன்றேரும் இரவிபோல் பெருமையும் பெற்று
குடுமிக்கு நிகர் யாருமிலர் என்ற
குடிப்பெருடன் வாழ்க பல்லாண்டு !
திணை : பாடான்
துறை : வாழ்த்தியல்
பாடியவர் : காரிகிழார்
பாடப்பட்டவர் : பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி
விவேக்பாரதி