பூ வைக்கவும்
எண்ணெய் படிந்த
வாரி கட்டிய இரட்டை குடுமி...
குடுமியில் ஒற்றை
பூவைக்கவும் தடை.....
காலை கவ்வி பிடிக்கும்
ஆங்கிலேய பாதணி...
நினைத்த காதணியை
அணிய முடியாத கட்டாயம்...
கொஞ்சம் பெரிய பொட்டு
வைக்க கூட தடை....
மணி கூட போட முடியாத
மொட்டை கழுத்து
முதுகில் பாடப் புத்தகம்
என்ற பெயரில்
டன் கணக்கில் மூட்டை சுமக்க
வேண்டிய பார நிலை....
விடுதலை விடுதலை விடுதலை
அரையாண்டு தேர்வு விடுமுறையில்
கிடைத்த விடுதலை ....