வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை - சிஎம்ஜேசு

உண்மைகள் மறைத்து பொய்கள் பல கூறி
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

நன்மைகள் மறந்து தீமை செயல்கள் புரிந்து
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

வீரம் காட்டி விவேகம் மறந்து
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

காமம் மறைத்து காதல் கதை சொல்லி
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

இல்லை என்று சொல்லி கொள்ளைகள் கொலைகள் புரிந்து வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

அறிவியல் என்று சொல்லி ஆன்மிகம் மறந்து
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

அன்னை தந்தை மறந்து அண்ணன் தங்கை மறந்து
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

நண்பர்கள் என்று சொல்லி நன்மை செயல் புரியாமல்
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

துன்பங்கள் ஏற்காமல் இன்பங்கள் மட்டும் வேண்டி
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

அடுத்தவர் நலன் கலைத்து நம் நலன் காண
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

உடனடி பொருள் வேண்டி உழைப்பதை மறந்து
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

துக்கங்கள் வேண்டாம் என்று நம் பக்கங்கள் பாராமல்
வாழ நினைக்கின்றோம் வீழ நினைப்பதில்லை

நன்மை மிஞ்சிடும் தீமையென மாறி உலகம்
வாழ நினைக்கின்றது வீழ நினைக்காமல்

உண்மை வாழ்வுனர்ந்து நன்மை வாழ்வுக்காக
நம்மை மாற்றுவோம் அன்பு மக்களே !

எழுதியவர் : சி .எம் .ஜேசு பிரகாஷ் (29-Dec-13, 10:51 pm)
பார்வை : 95

மேலே