கனவுக்காதல்
எதிர் வீட்டுப் பெண்மகவை,
ஏறெடுத்துப் பார்க்கத் துவங்கியதும்....
ஏங்கிப்போன என்னவனின்
ஏக்கச் சிந்தனையோ!
காதலில் மூழ்கிவிட,
கன்னியவள் கண்களில்,
காதல் மோகம் கூத்தாட,
கலந்து விட்டான்.
காதல் கடலில் ......
திடீரென ஓரொலி கேட்க
விழித்துக் கொண்டதால்....
தன் காதலை இழந்து விட்டான் !
கட்டிலில் புரண்டவாறே
கண்மூடிக் கிடந்தும் ...
தெளிவுறவில்லை அவனுக்கு !!!!
தானிழந்த காதல்கதை .........!!