நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து

நாட்கள் தவறாமல்
நாட்காட்டியை கிழித்து
புத்தாண்டிற்கு
விழாயெடுக்கும் இளைஞர்களே..!!!
கிழித்ததென்னவோ எனை
கிழிந்ததென்னவோ - உங்கள்
வாழ்க்கையிலோர் பக்கம்..!!!
வீசியதென்னவோ குப்பையில்
வீழ்ந்ததென்னவோ - உங்கள்
எதிர்கால லட்சியம்..!!!
எனை கிழித்ததை தவிர
ஓராண்டில் - நீங்கள்
முடித்த கடமைகளென்ன..??
உயிரில்லை என்றாலும் - நான்
உற்று நோக்குகிறேன்
உணர்வில்லா இளைய சமூகத்தை..!!
ஆறாம்
அறிவு எங்கே ?
ஐந்தறிவு
ஜீவனாக உறங்குகிறாய்..!!!
வலைத்தளத்தில்
அறிவைத் தேடாமல்
அரட்டை அடிக்கிறாய்...!!!
கல்லூரியில்
கல்வியைக் கற்காமல்
காதலை கற்கிறாய்..!!!
நாளும்
முகத்தை அலங்கரித்து
முத்தமிழை அவமதிக்கிறாய்..!!!
மதுவில்
நாட்களைக் கடத்துவீர்
நாட்டின் நிலையறியாமல்..!!!
உன் மொழி
உன் நாடு
உன் சமூகம் - இவையாவும்
உன்னை நம்பி..!!!
சிந்தையைச் செதுக்கி
சிந்தித்துச் செயல் படு
சிகரம் தொடும் இந்தியா..!!
அறிவுரை பிடிக்காது
இளைஞர்களுக்கு
ஆதலால் முடிக்கிறேன் உரையை..!!!
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்களுடன்.!!!
இப்படிக்கு
நாட்காட்டி