விருதும் நன்றியும் விண்ணப்பமும்
விருதும்.... நன்றியும்.... விண்ணப்பமும்....
=======================================
வாசல் தேடி வந்த விருது
மகிழ்ச்சியான விருந்து
சொல்ல வார்த்தை ஏதுமில்லை
விருந்தில் கொஞ்சம் மருந்து!!!
தளத்தாரே... அகனாரே...
கொஞ்சம் செவிமடுத்து கேளும்
படைப்பாளிக்கெல்லாம் பரிசளித்த
பாரி வள்ளல்களே கேளும்!!!
எந்தன் சிறு விண்ணப்பத்தை
ஏற்குமா தள எழுத்து??
ஏற்றுக் கொண்டால் மகிழ்ந்திடுமே
தள நட்பனைத்தும் சேர்ந்து!!!
ஓசையின்றி எழுத்தில் பேசி
நாங்கள் வாழும் கூட்டம்
விழாவெடுத்து விருது என்றால்
கவிகள் பூத்து மலரும் தோட்டம்!!!
எண்திசையில் விரவிக் கிடக்கும்
எழுத்துலகின் முகங்கள்
ஒன்று காண விழைகின்றேன்
விழாவெடுத்தே உதவிடுங்கள்!!!
என்போல ஆசையுண்டா
நட்பு நெஞ்சங்களே உரைத்திடுங்கள்
உண்டென்றால் உங்கள் கருத்தை
நீங்களும் பதிவிடுங்கள்!!!
இன்னுமொரு விண்ணப்பத்தை
இட்டு வைப்பேன் இங்கே
அகனார்க்கும் விருது செய்தி என்றால்
அகமகிழ்வேன் கண்டே!!!
விரு(ந்)து படைத்த காரணர்கள்
அனைத்து பேர்க்கும் நன்றி - இன்னும்
தமிழ்வளர்த்து புகழ் பெருக்கும்
தளத்தினர்க்குமென் நன்றி!!!
அன்புடன்,
சொ. சாந்தி