பள்ளிப்பருவம்

வார்த்தைகள்
என்னை துரத்தும் போது
தனிமை
என்னை வரவேற்கிறது
தனிமையை
ஏற்றுக்கொள்ள நினைக்கையில்
தொலைந்து போனது
இளமை
இங்கிதம் இல்லாமல்
இயற்கையை ரசித்தேன்
ஓடுகளில் ஒழுகிய
மழை நீரை
உள்ளங்கைகளில்
ஏந்தியிருக்கிறேன்
பட படவென பறக்கும்
பட்டாம்பூச்சியை
கொட்டாங்குச்சி சிறையில்
அடைத்திருக்கிறேன்,,,,,
என்னை விட
அழகாக இருந்த குற்றத்திற்காக,,,,,,,,,,,
அவிழும் பாவாடையை
ஒரு கை அரவணைக்க,
அத்திபழத்திற்காக
ஒரு கை சண்டை போட
ஆளுக்கொரு திசையில்
ஓடிவிட்டோம்
தோட்டக்காரன் போட்ட
சத்தத்தில் ................
என்றும் மனம் மாறாத
எங்க ஊர்
.........

எழுதியவர் : rajasudha (31-Dec-13, 11:01 am)
Tanglish : pallipparuvam
பார்வை : 109

மேலே