தினம் பறந்தேன்
என்னவனே என்னவனே என அழைத்தேன் என்னவள் நீஇல்லை எனசொல்ல மனம் நொந்தேன்
இந்த தினம் நீ போதும் என்றுரைத்தேன்
எந்த தினமும் நீ வேண்டாம் பதில் பெற்றேன்
சிந்தையிலே ஏதுமின்றி சிக்கி தவித்தேன்
சந்தங்களெல்லாம் கசப்பாக விக்கி தவித்தேன்
கண்ணீரே வாழ்வென எண்ணி மடிந்தேன்
கானல் நீராய் ஆனதென மண்ணில் புதைந்தேன்
கண்ணில் நீர் வற்ற ஜென்னல் திறந்தேன்
வண்ணமாய் வானவில் உள்ளம் களித்தேன்
சின்னஞ்சிறு மழை தூறல் மெல்ல நனைத்தேன்
சித்திரமான பாவை நான் அன்று உணர்ந்தேன்
விண்மீன்கள் கண்கொட்ட பார்த்து ரசித்தேன்
வெண்ணிலவது முழு மதியாக கண்டு களித்தேன்
இத்தனைநாள் இவையனைத்தும் மறந்தேன்
இன்று வண்ணத்து பூச்சியாய் தினம் பறந்தேன்