அன்பு உள்ளங்களை தேடி

விடிந்தால் மகிழ்ச்சி காத்திருக்கிறது சுவாமிநாதனுக்கும் அவர் மனைவிக்கும். ஏனென்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து தங்கள் மீதி வாழ்க்கையை கழிக்க திட்டமிட்டுரிந்தனர்.


அன்று இரவு,சுவாமி தன் மனைவியிடம்... "லதா நாளைக்கு நம்ம பிள்ளைகளோட சேர்ந்து இருக்கபோறோமுன்னு சொன்னதுமே அவங்க ரொம்ப சந்தோசம் படுவாங்க இல்ல?"என்றார்.

அதற்கு லதா "ஆமாங்க,ரொம்ப நாளா அவங்களும் இதையேதான் கேக்குறாங்க?,நீங்க சொன்ன மாதிரி நாளைக்கு இத கேட்டதும் ரொம்ப சந்தோஷ படுவாங்க..." என்றாள்.


"ஆமா,ரகு பையன் ராஜேஷுக்கு அரிசி முறுக்கும் அதிரசமும் பிடிக்கும்ல,அதன் ரெடி பண்ணியாசுள்ள?"...

"அதெல்லாம் காலைலேயே ரெடி பண்ணிட்டு பேக் பண்ணிட்டேன்....".

"ஆமா, விமலாக்கு நெய் லட்டு புடிக்குமே,அது?"

"எனக்கு தெரியாதாங்க,எல்லாம் ரெடியா எடுத்துதான் வச்சிருக்கேன்..".

"அப்ப சரி, சரி சரி காலைலேந்து ரொம்ப வேல செஞ்சிருப்ப...முத நல்லா தூங்கு, காலைல நேரத்திலேயே பஸ் ஏறுனாத்தான் சீக்கிரமா பொய் சேர முடியும்."


"சரிங்க... நீங்களும் ரொம்ப நேரம் முழிக்காம நல்லா தூங்குங்க...."என்றாள் லதா.


மறுநாள் மகன் ரகு வீட்டில், "வாங்க அத்தை,வாங்க மாமா,இப்பதான் நேரம் கெடச்சுதா இங்க வர.நீங்க இல்லாம குழந்த ஏங்கி கெடக்குறான்....".


"இல்லமா,அதான் இதோ ஓடி வந்துட்டுமே எங்க செல்ல பேரன பாக்க...". என்ற லதா தன் பேரனை அள்ளி முத்தமிட்டால்...

"இங்க பாரு,பாட்டி உனக்கு என்னென்ன கொண்டு வந்துருகேன்னு..." என்று தான் கொண்டு வந்ததை காட்டினாள் லதா.

"எதுக்கு அத்தை இதெல்லாம்... இங்க தான் நெறைய ஸ்வீட்ஸ் கடை இருக்கே...".

"இருக்கட்டுமா , என்ன இருந்தாலும் நம்ம செய்யுற மாதிரி வராதுமா" என்று தன்னிடம் ஓடி வந்த பேரன் ராஜேஷை மடியில் அமர்த்தினால் லதா.

"நீங்க நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க,அப்பறமா எல்லா பேசிக்கலாம் அத்தை.."

அன்று இரவு ரகுவும் விமலாவும் அவர்கள் அறையில்,

"ஏங்க,உங்க அம்மாவும் அப்பாவும் இனி இங்கயே டேரா போட போறாங்க போல..."

"ஏன் விமலா அப்படி சொல்ற, கொஞ்ச நாள் இருந்துட்டு போட்டுமே..".

"இங்க பாருங்க,சும்மா இந்த நொள்ள சாக்கு சொல்லாம முத நமக்கு வர வேண்டிய உங்க அப்ப அம்மா பூர்வீக வீட்ட நம்ம பேருக்கு மாத்திர வழிய பாருங்க.. அந்த எடம் இப்ப நல்லா ரேட்டுக்கு போகுமுன்னு எங்க அப்ப சொன்னாரு..."

"சரி சரி,காலைல மெதுவா இந்த பேச்சை அப்பாகிட்ட சொல்றேன்..."..

இதை வெளியில் கேட்ட சுவாமியும் லதாவும் மெதுவாக எழுந்து வீடு வாசலில் வந்து அமர்ந்து ரகு பேசியதை பற்றி யோசிக்கலானார்கள்.

"ஏங்க,நம்ம இங்க இவங்க கூட இருக்க தானே வந்தோம்.ஆனா இப்பவே இவங்க நம்ம பூர்வீக வீட்ட விக்க பாக்குறாங்களே..." என்று ஆதங்க பட்டாள்.

"கொஞ்ச பொறுமையா லதா,இது நம்ம பூர்வீக இடம்.இத நமக்கு அப்பறம் நம்ம பேரனுக்கு கெடக்கணும்.ஆனா உடனே எழுதி வச்சுர முடியாது.என்ன பண்ணலாம்,,சரி அப்ப ஒன்னு பண்ணுவோம்...." என்று தான் திட்டத்தை லதாவிடம் கூறினார்.


மறுநாள் காலை விமலா ரகுவிடம் சாடை காட்ட,ரகு சிரித்த முகத்தோடு தான் பெற்றோர் முன் அமர்ந்தான்.

அவன் ஆரம்பிப்பதுற்குள்,சுவாமி ரகு,நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம்.அப்பறம் ஒரு ஆதரவு அற்ற குழந்தைய தத்து எடுக்கலாம்னு இருக்கோம்.ஏன்னா பாரு,இப்ப நாங்க தனியா இருக்கோம்.எங்களுக்கு ஏதாச்சு ஒன்னு ஆச்சுனா பாத்துக்க,அப்புறம் எங்க கூட நேரத்த செலவிட ஒருத்தரும் இல்ல...."

"ஏன்பா அப்படி சொல்றீங்க, நாங்க இருக்கோம்ல.." என்றான்.
இருக்கீங்க ஆனா நாங்க தனிமையா இருக்குறதாதான் உணர்றோம்.அப்பறம் நம்ம வீட்ட எங்களுக்கு அப்பறோம் எங்கள பாத்துக்குற அந்த பையனுக்கு கல்யாண பரிசா குடுக்க உங்க அம்மாவும் நானும் முடிவு பண்ணிருக்கோம்..."என்றார்..

இதை கேட்டதுதான் தாமதம், "ஏன் அத்தை நாங்க உங்கள பாத்துக்க மாட்டோமா? தேவை இல்லாம ஏன் வீட்ட ஒரு அநாதை பையனுக்கு எழுதி வக்கணும்????" என்றாள்.

"இல்லமா,இங்க எங்களால இந்த சுற்றத்துக்கு ஒத்து போக முடியுமுன்னு தோனல?,உங்களாலையும் அங்க இருக்க முடியாது?மேலும் உங்களுக்கு எங்களவிட எங்க சொத்தா முக்கியமா படபோது....?" என்றாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்த இருவரிடமும் தாங்கள் கிளம்புவதாக கூறி கிளம்பினர்.


"ஏங்க,நம்ம பாட்டுக்கு புறப்பட்டு வந்துட்டோமே,அங்க இருக்கத்தானே முடிவு பண்ணி போனோம்?"என்றாள் லதா.

"ஆமா,இப்ப இங்க இவங்க கூட இருந்தா இவங்க நம்ம சொத்த பறிச்சுட்டு நம்மளையும் ஏதாவுது முதியோர் இல்லத்துல சேர்க்க மாட்டாங்கக்றது என்ன நிச்சயம்?இப்ப நமக்கு தேவ நம்ம மேல அன்ப காட்ட நாம அவங்க அன்ப காட்டவுந்தான்.....".


"நம்ம வீட்டுக்கு பக்கத்துல உள்ள குழைந்தைகள் காப்பகம் இருக்கே,ஞாபகம் இருக்கா? அங்க நாம போவோம்.நம்மள போலதானே அந்த குழந்தைகளும் அன்புக்கு ஏங்கும்,இனி நம்மளால முடிஞ்ச உதவிய அங்க செய்வோம்,அப்பறம் நெறைய முதியோர் இல்லங்கள் இருக்கு,அங்க நம்ம இந்த குழந்தைகள கூட்டிப்போய் அவங்கள சந்தோசம் படுத்துவோம்.."நம்ம பேரன பாத்துக அவங்க பெற்றோர் இருக்காங்க.ஆனா நம்மள மாதிரி அன்புக்கு ஏங்குற குழந்தைகளையும் வயசானவுங்களையும் பாத்துக்க யார் இருக்கா? நம்மளால முடிந்த உதவிகளா செய்வோம்.என்ன நான் சொல்றது?" என்ற கணவனின் பக்குவப்பட்ட வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்து சரி என்று தலையசைத்து அவர் தோளில் சாய்ந்தாள்....."



பேருந்தும் அவர்கள் மனமும் புறப்பட்டது ஆதரவற்ற அன்பு உள்ளங்களை தேடி...

எழுதியவர் : Guruprasad (31-Dec-13, 1:57 pm)
பார்வை : 467

மேலே