புதிய காலம்
இதோ
இன்னுமொரு விடியல்
தன் கதவுகளை
திறக்கிறது...
திறந்த மனதோடு
உள்ளே வாருங்கள்....
கனவுகளால்
கட்டமைக்கப் பட்ட
ஒவ்வொரு நாளும்
உங்களுக்கான பறவை...
தேட முடிவெடுத்த பின்
தொலைதலில்
பயம் கூடாது....
ஓட தொடங்கிய பின்
தொடுவானம் தூரம்
என்பதில்
மூச்சு மட்டுமே வாங்க முடியும்...
எல்லாம் முடியும்
என்பதாகவே பேசட்டும்
கண்களும் காலமும்....
தீ சுடத்தான் வேண்டும்
வாழ்கையும் அப்படியே...
சோதியா.... தீப்பந்தமா....
காட்டுத் தீயா....
முடிவுகளை உங்களிடமே
விடுவது தான் காலம்....
புதிய வருடம்
புதிதாக பிறக்கும் குழந்தை....
நல்லதோ கெட்டதோ
வளர்க்கும் கைகளில்.....
நீண்டு கிடக்கும் நீலவானம்
மௌனமாய் புன்னகைக்கிறது.....
நீதியுள்ளோர் பிழைக்க கடவீர்.....