இனிதே புத்தாண்டே வாவா

இனிதே புத்தாண்டே வா!வா!
சனியத் தொல்லைகள்
தொலைக்கவே வா!வா!
நல்லதும் கெட்டதும்
நடத்தி முடித்த
செல்லும் ஆண்டே போ போ!

தொல்லைகள் தொலைந்தால்
நல்லது என்போம்.
அல்லவை தொடர்ந்தால்
பொல்லது என்போம்.
எல்லாம் அவன் செயல்
வல்லதாய் வா வா!

வேண்டாம் என்றால்
விடவா போகிறாய்
மாண்டாருடன் காலமும்
மடிந்தா போகும்!
ஆண்டு நீயும்
ஆவன செய்க!வா!வா!

காலம் உன்னை
கடவுள் என்போம்.
கோலம் தன்னை
கூறி வரைந்தும்
மேலும் நலமே
மீள அழைத்தோம் வா!வா!

நடப்பது நலமாய்
நடக்கவே வா!வா!
கடந்ததில் நல்லது
தொடரவும் வா!வா!
கிடப்பினிலும் நல்லதை
கிளறவே வா!வா!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (31-Dec-13, 7:58 pm)
பார்வை : 197

சிறந்த கவிதைகள்

மேலே