புத்தாண்டை வரவேற்ப்போம் நம்பிக்கைச் சுடர் ஏற்றி

காலங்கள் கரைந்தோட
நாட்கள் உருண்டோட
ஏக்கங்கள் நெஞ்சுதனில் உறவாட
கனவுகள் பல இதயத்தில் இழைத்தோட
நம்பிக்கை சுடர் ஏற்றி
இப்புத்தாண்டை வரவேற்போம் ,,

புது வருடம் ஒவ்வொன்றிலும்
சபதங்கள் பல
எடுத்த ஞாபகம் ..!
சபதம் எல்லாம் நிழலாய்,
ஞாபகம் எல்லாம் கனவாய்
ஓடி முடிந்த
வருடங்கள் பல..!!!

கழிந்தது கழிந்ததாக இருக்கட்டும்,
வரும் காலதில்லேனும்
உண்மை நிலைக்கட்டும் ,
சத்தியம் ஜெயிக்கட்டும்,
புதிதாய் பிறப்போம்
புதிய சபதம் ஒன்று எடுப்போம்,

நான் என்று கூறாமல்
நாம் என்று சூளுரைப்போம் ..!!
எனது என்று பாராமல்
நமது என்று பார்த்திடுவோம்..!!
எனக்கு என்று கேக்காமல்
நமக்கு என்று கேட்டிடுவோம்..!!,
நாட்டின் எல்லைகளை அழித்து
ஓர் உலகம் ,ஓர் நாடு
என்று ஆக்கிடுவோம்..!!
மொழியால் தனித்தாலும்
மனதால் இணைந்திடுவோம்..!!
காற்றுக்கும் தண்ணீருக்கும் கூட
இடப்பட்ட வேலிகளை அகற்றிடுவோம்..!!
மனிதனை மதித்திடுவோம்
அவன் மனதை போற்றிடுவோம்..!!
வஞ்சனை செய்பவனையும்
பிறரை தூற்றி ஏசுபவனையும்
வாழ்த்திடுவோம்..!!
மரணமில்லா சட்டம்செய்து
மன்னிப்பை மட்டும் தண்டனையாய் வழங்கிடுவோம்..!!

இத்தனை கனவுகளையும்
இந்த புத்தாண்டில்
நம்முள் விதைத்திடுவோம் ..!!
இது வேரூன்றி
செழித்து எழ
அன்பு என்ற நீரூற்றி வளர்த்திடுவோம்..!!
இது ஒருபோதும் மடியாதிருக்க
நம் கைகோர்த்து ஒன்றாய் நின்றுடுவோம்..!!
இரக்கத்தை மட்டும் ஆயுதமாய் ஏந்தி..
மரணத்தையும் வென்றிடுவோம்..!!
இந்த சபதம் எல்லாம் மனதில்கொண்டு
புத்தாண்டை வரவேற்ப்போம்
நம்பிக்கைச் சுடர் ஏற்றி


என்றும்...என்றென்றும்...!!

எழுதியவர் : jeevan (1-Jan-14, 5:55 am)
பார்வை : 91

மேலே