காண்க புத்தாண்டு கர்த்தரின் ஆசியுடன்

தாயின் கர்ப்பம் தான்னில் உன்னைத்
===தானே அறிந்து கொண்டானே!
நோயும் துயரும் நொடியில் அகலும்
===நொடிந்து போக வேண்டாமே!
வாயி லாக இருப்பார் அவரே
===வழிமேற் செல்வாய் பயமின்றி!
தேயாத் திடநம் பிக்கை தூக்கி
===தினமும் நடந்து செல்மகனே!


புதிய நோக்கம் உனதா கட்டும்~!
புதிய எண்ணம் உனதா கட்டும்!
புதிய பாதை உனதா கட்டும்!
புதிய வாழ்வும் உலகா ளட்டும்!

பாழ்வெளியில் நீரோடை பார்க்க வைப்பவர்!
===பரனுனை நடத்திடுவார் பயப்ப டாதே!
வாழ்வெளியில் நீரேனநீ விரைந்தே ஓடு!
===வழியெல்லாம் செழிப்பினையே நிறைத்துக் கூடு!
கீழுள்ளோர் வாழ்வினிலே உயர்வைக் கூட்டு!
==கேள்விகளை உதறிவிட்டுப் பதிலாய் வாழு !
தோளாகு! பிறருடைய துயரைத் தூக்கு!
===தொண்டாற்று ஏசுவைப்போல் துயர்கள் நீக்கு!

==அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!===========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (1-Jan-14, 4:35 am)
பார்வை : 135

மேலே