என்னை அறிந்தவள்

முதன்முதலாய் என்னை
அணைத்தவளும் அவளே
முதன்முதலாய் என்னை
முத்தமிட்டவளும் அவளே...

ஆறாத்துயர் கூட
ஆறும் அவள் மடியில்
ஆறுதல் தேடும்போதெல்லாம்
அவள் மடியே தலையணையாய்...

தீராத சோகமெல்லாம்
தீர்க்கும் அவள் புன்னகை
தோல்விகளை எல்லாம்
தோற்கடிக்கும் அவள் தோழ்கள்...

உயரங்களை நான் கடக்க
துயரங்களில் துணை நிற்கும்
தூய்மையான நட்பவள்...

உயிர் கொடுத்து
உலகிற்கு அறிமுகம் செய்து
உன்னை தாய் என்று சொல்வதில்
பெருமைப்பட வைத்தவளே
உன் அன்பொன்று போதும்
என்னுயிர் பிரியும் வரை
இந்த உலகில் நான் ஜெயிக்க....

எழுதியவர் : மயூசேகர் (1-Jan-14, 1:29 pm)
Tanglish : ennai arinthaval
பார்வை : 222

மேலே