மூன்று பேர் ஒரே காதல்

மூன்று பேர் ஒரே காதல் ...

ஜெய் மற்றும் கார்த்திக் ரெண்டுபேருமே ஒரே COLLEGE ல 3RD YEAR படிக்கிறவங்க ஜெய் MECHANICAL ENGINEERING கார்த்திக் COMMUNICATION ENGINEERING ஜெய் மற்றும் கார்த்திக் சுமாரா இருப்பாங்க இதுல முக்கியமான விஷயம் ரெண்டுபேரும் நண்பர்கள் இல்லீங்க ....

முதல் ஆண்டு மாணவர்கள் வரவு இவர்கள் மூன்றாம் ஆண்டில் இவர்கள் இருவரும் நுழையும் போது ...கண்டார்கள் கவிதாவை ..
வேற என்ன அழகுன்ன அழகு அப்படி ஒரு அழகு ..
கதை படி இருவரும் கவிதா என்ற பெண்ணை காதலித்தனர் ...

ஜெய் முதலில் காதலை கவிதாவிடம் சொன்னான்

கவிதா கொடுத்த பதில் " மன்னிக்கணும் நான் இங்க படிக்க வந்திருக்கேன் காதலிக்க அல்ல தயவு செஞ்சு என்கிட்டே இதப்பத்தி இனிமே வந்து பேசாதிங்க அப்புறம் உங்க நண்பர்கள் கிட்ட சொல்லி போகும் போதும் வரும் போதும் உங்க பேர் சொல்லி COMMAND அடிக்க வேணான்னு சொல்ல்ங்க PLEASE "

கார்த்திக் சிறிது புத்திசாலி என்று சொல்லலாம் ஆனால் அவனுக்கும் அதே பதில் தான் கிடைத்தது அவன் காதலை கவிதாவிடம் சொல்லும் போது ....

இப்படியே மூன்று மாதம் முடிந்து விட்டது ..

ஒரு வாரம் கல்லூரி விடுமுறை

அப்பொழுதும் ஜெய் கவிதாவின் வீட்டிற்கு சென்று அவர் அப்பா அம்மா மற்றும் அவள் தங்கையுடன் பழகி அவளையும் பார்த்து வந்தான் எப்படி என்பது அப்பறம் தான் புரிந்தது...
ஜெய் மற்றும் கவிதா அவர்களின் அம்மா இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள் அதன் காரணமாக ஒருதடவை ஜெய் கவிதா வீட்டிற்கு சென்றிருக்கிறான் பின்பு அதையே பழக்கமாக்கி விட்டான்...வர எதுக்கு கவிதாவின் இதயத்தில் இடம் பிடிக்கத்தான் ...ஆனால் கவிதா அவனிடம் பேச மாட்டாள் அவன் வீட்டிற்கு வந்தாலே அவள் அறைக்கு சென்றுவிடுவாள் ஜெய் போன பின்புதான் வெளியில் வருவாள்...

கல்லூரி விடுமுறை முடிந்து அனைவரும் ....

கல்லூரிக்குள் நுழையும் போது கார்த்திக் முகத்தில் ஒரு சந்தோசம் காரணம் என்றைக்கும் பார்க்காமல் செல்லும் கவிதா அவனை பார்த்து சிரித்தது ஏன் ?

கவிதாவிடம் கேட்ப்போம் ..
தோழி ..
ஏய் கவிதா எதுக்கு கார்த்திக்க்க பாத்து சிரிச்ச ..

கவிதா " இல்லியே நான் சிரிக்கவில்லையே "

தோழி : ஏய் நான் தான் பாத்தனே சொல்லுடி என்ன விஷயம் ஒன்னும் இல்ல போன வாரம் SUNDAY MARKET நானும் என்னோட அம்மாவும் போயிருந்தோம் அப்போ கார்த்திக் அங்க காய்கறி வாங்கிகிட்டு இருந்தா அப்போ அந்த கடைகாரர் 5 ருபாய்க்கு வெங்காயம் இல்லன்னு சொன்னாரு அப்போ கார்த்திக் வேற கடைக்கு போய்ட்டா ....அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி திரும்பி வந்து அந்த கடைகாரன்கிட்ட அவன் கூடைய காட்டி இந்தாய்யா பாத்துக்கோ 5 ரூபாய்க்கு வேங்கயன்னு சொல்லிட்டு போனான் ..

தோழி " அதுக்கு எதுக்குடி இப்ப சிரிக்கிற "

கவிதா " இல்லப்பா அவன் போனதுக்கு அப்புறம் அந்த கடைக்காரன் சொன்னா இவன கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட வாழ்க்க நல்லா இருக்கும் இந்த மாதிரி பையன் கிடைக்கிறது தான் கஷ்ட்டம்னு சொன்னா அதுக்கு எங்க அம்மா என்னடி கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டாங்க " அவங்க விளையாட்டா கேட்டாலும் எனக்கு உண்மையிலேயே கேட்டது மாதிரி இருந்தது அதனால தான் அவன பாத்ததும் சிரிச்சே "

தோழி " அப்போ கல்யாணம் பண்ணிக்க போறியா என்றால் "

கவிதா " ஏய் சும்மா சொன்னேன் யார்கிட்டயும் சொல்லாதே என்றால் "

கார்த்திக் பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் சொல்லி சொல்லி சந்தோசம் தாங்க முடியாமல் இருந்தான்..இதை காதில் கேட்ட ஜெய் கோபம் அடைந்தான் ...

ஒரு நாள் மாலை நேரம் கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஜெய் மற்றும் கார்த்திக் காலேஜ் CRICKET GROUND ல் விளயாடிகொண்டிருந்தனர்
(CRICKET GROUND கடந்துதான் அனைத்து மாணவர்களும் வெளியில் செல்ல வேண்டும் பொதுவாக அனைவரும் சென்ற பிறகுதான் விளையாடுவது வழக்கம்)
அன்று கவிதாவும் அவளுடைய நண்பர்களும் 1 மணி நேரம் கழித்து தான் வகுப்பறையல் இருந்து வெளியில் சென்றார்கள் அப்போது CRICKET விளையாடிக்கொண்டிருந்தவர்கள் விளையாட்டை நிறுத்தினர் அவர்கள் கடந்து செல்வதற்காக அப்போது ஜெய்யிடம் பந்து இருந்தது அதே சமயம் கவிதாவும் அவர்கள் நண்பர்களும் மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்

அப்போது

திடீரென என்ன நினைத்தானோ தெரியாது கையில் இருக்கும் பந்தை வைத்து கவிதாவின் பின்னால் எறிந்தான் பந்து பட்டதும் கோபம் அடைந்த கவிதா விறுவிறுவென கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தால்
அவள் தோழி உடனே " எங்கடி போற என்றால் " கவிதா கோபமாக நான் PRINCIPAL அவர்களிடம் COMPLAINT செய்யபோகிறேன் என்றால் உடனே அவள்
தோழி கையை பிடித்து இழுத்து " நில் நீ அவர்களிடம் சொன்னால் அவன் படிப்பு பாழாகிவிடும் என்றால் " ..
சிறிதுநேரம் அவள் அங்கேயே நின்றால் அவளை சுற்றி அவளது தோழிகள் ...
அதே சமயம் ஜெய் செய்ததை கண்டு அவனுடைய நண்பர்கள் அவனிடம் கோபம் கொண்டனர் அதே இடத்தில் கார்த்திக் இருந்தான் ஆனால் அவன் ஜெய்யிடம் எதுவும் சொல்லவில்லை அமைதியாக அமர்ந்திருந்தான்...

ஆனால் அவனுக்கு புரிந்தது கவிதா அவனிடம் தனது வீட்டிற்கு வருவதை நிறுத்துமாறு தனது தந்தையிடம் சொல்ல அவரும் அவனிடம் சொல்லி இருக்கிறார் அதனால் தான் என்று நினைப்பதற்குள் அவன் நண்பன் தினேஷ் அவனிடம் வந்து "கார்த்திக் விஷயம் தெரியுமா கவிதா யாரையோ காதலிக்கிறாளாம் அது தெரிஞ்சனாலதான் ஜெய் இப்படி பண்ணிருக்கான் " என்றான்

கார்த்திக் இதயத்தில் ஒரு சத்தம் ஆதே சமயம் ஒன்றும் கவலைப்படாதது போல் ஏண்டா அழகான பொண்ணுன்னா யார் வேன்னுனாலும் காதலிக்கலாம் அதுக்காக அவள் எல்லாரையுமா கல்யாணம் பண்ண முடியும் என்றான்

கார்த்திக்..இப்படி சொல்லி முடிப்பதற்குள் கவிதா கார்த்திக்கை நோக்கி நடந்து வந்தால் அவன் அருகில் சென்றால் அவள் அருகில் வந்ததும் கார்த்திக் எழுந்து நின்றான்
அவள் கண்களை பார்த்தான் அவள் கண்கள் கலங்கி இருந்தன அவன் அவள் கண்களை பார்த்த அடுத்த நொடி பட்டென்று கட்டி பிடித்து I LOVE U KARTHICK I LOVE U KARTHICK என்றால் அவ்வளவு தான் விளையாட்டுமைதானம் முழுதும் இருந்த அனைவரும் கூச்சல் போட சட்டென்று விலகி தனது தோழிகளிடம் ஓடி சென்றால்...கவிதா

ஜெய் அருகில் இருந்த அனைவரும் கார்த்திக் அருகில் வந்து நின்றனர் கார்த்திக் என்ன செய்வது என்று தெரியாமல் திகைச்சு நின்றான் அப்பொழுதான் தெரிந்தது கவிதா ஏன் LATE ஆகா கல்லூரிமுடிந்து வெளியில் வந்தால் ? ஜெய் எதற்க்காக கோபப்பட்டான் என்று ?

அடுத்தது என்ன இருவரும் காதலோ காதல் ...

ஒருமுறை கவிதா கார்த்திக்கிடம் " நீ ஏன் முத்தம் கித்தம் எதுவும் கேட்க்கவில்லை" என்றால் கூச்சத்துடன்
கார்த்திக் " உன்னை கைப்பிடிக்கும் நாள் வரை காத்திருக்க சொல்கிறது என் இதயம் உன்னை காதலிக்க சொன்ன இதயம் உன் கைவிரல் மேல் பட படபடக்கிறது " என்றான் ஆம் அவளை அவன் கைவிரல்கள் கூட சீண்டியது கிடையாது...

இவர்கள் காதலிக்கிறார்கள் என்றதும் ஜெய் விலகி விட்டான் அதன் பின் அவன் அவளிடம் பேசுவதில்லை ...

கல்லூரி முடிந்ததும் கார்த்திக் வேலையில் சேர்ந்தான் எப்பொழுதாவது கவிதாவுடன் PHONE ல் பேசுவான் ஒருநாள் PHONE ல்
கவிதாவின் தந்தை அவனிடம் " உங்களை பார்க்க வேண்டும் வீட்டிற்கு வர முடியுமா" என்றார் கார்த்திக் "சரி அங்கிள் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு அன்று மாலை கவிதாவின் வீட்டிற்கு சென்றான் அப்பொழுது அவர்கள் வீட்டில் ..
கவிதா அப்பா : எங்கப்பா WORK பண்றீங்க ?என்ன சம்பளம் ?

கார்த்திக் : XXXXXXX இந்த COMAPNY ல WORK பண்ற UNCLE PAY 10,000.

கவிதா அப்பா : இல்லப்பா என்னோட COMPANY ல எனக்கு பதில் உன்ன சேக்கலாம்னு ஒரு IDEA 45000 சம்பளம் கிடைக்கும் .

கார்த்திக் : எதுக்கு UNCLE?

கவிதா அப்பா : இல்லப்பா நான் என்னோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலான்னு இருக்கே நீ OK ன்னு சொன்னான்னா உடனே கல்யாணத்த நடத்திட்டு நான் என்னோட ரெண்டாவது பொண்ண பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடுவேன்.

கார்த்திக் : கல்யாணமா எனக்கா இல்லை UNCLE இன்னும் 5 வருஷம் கழிச்சி தான் கல்யாணம் அதுக்கு முன்னாடி கண்டிப்பா என்னால முடியாது அப்படி உங்களுக்கு முன்னாடியே பண்ணனும்னா நீங்க உங்க விருப்பபடி செய்யுங்க நான் அதில் தலையிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு கவிதாவின் கண்களை பார்த்தான் ..பின்பு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு சென்றான் ..

(கார்த்திக் குடும்பத்தில் அக்கா கல்யாணம் முடிந்துவிட்டது அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கும் கார்த்திக் வயதிற்கும் 7 வருடம் இடைவேளை அதனால் அவளுக்கு கல்யாணம் முடித்திவிட்டு பின்பு தான் கல்யாணம் என்று தெளிவாக இருந்தான் )

பின்பு வழக்கம் போல் PHONE ல் பேசிக்கொண்டிருந்தான் 2 மாதங்கள் ஆனது கவிதாவின் PHONE NUMBER திடீர் என்று வேலை செய்யவில்லை என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாள் கழித்து கவிதாவின் வீட்டிற்கு சென்றான் அவனை வாசலில் கண்ட உடன்
" கவிதாவிற்கு நிச்சயம் முடிந்துவிட்டது அவள் அவளுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டால்" என்றார் கவிதாவின் அம்மா...கார்த்திக்கை பார்த்து

கார்த்திக் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்தான் ..பின்பு வீட்டிற்கு வந்து விட்டான் .

அவளின் கண்கள் அவனை வாட்டின ..

சிறிது நாட்கள் அவளையே நினைத்திருக்க..

திடீரென அவனுக்கு அவனுடைய COMPANY ல் பயிற்சிக்காக GERMAN போகும்படி உத்தரவு வந்தது 6 மாதம் பயிற்சி முடிந்ததும் அங்கே 1 வருடம் அவன் அங்கேயே வேலை செய்யவேண்டி இருந்தது எல்லாம் முடித்து வீடு திரும்பினான் ...1 வருடம் 6 மாதம் கழித்து

காலை நேரம் அனைவரும் விறு விறு சுறு சுறு என வேலைக்கு சென்று கொண்டிருந்த வேலையில் ரயில் நிலையத்தில் வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்தான் கார்த்திக் ரயில்கள் ஒவ்வொன்றாக வந்தவண்ணமும் போன வண்ணமுமாக இருந்தது அப்போது தெரிந்த முகம் அவன் கண்ணில் பட்டது அது கவிதாவின் முகம் அதே சமயம் அவளின் வயிறு 7 அல்லது 8 மாசத்தை காட்டியது ..

அதை கண்டும் காணாதது போல் பார்த்தபடி நின்றான் பின்பு OK நல்லா இருக்கட்டும் என்று மனதிற்குள் சொல்லி கொண்டு அவனின் ரயில் வந்ததும் புறப்பட்டான் ...

பின்பு ஒருநாள் மாலை வேலை...

வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது மறுபடியும் கவிதா ..இருவரும் ஒரே இடம் என்பதால் கவிதாவும் அதே ரயிலில் பெண்களின் ரயில் பெட்டியில் ஏறுவதை கண்டான் ...

ரயில் கவிதா இறங்கும் இடத்தில் வந்தது கார்த்திக் இறங்கும் இடமும் அது தான் .
அப்போது கவிதாவை அழைத்துபோக வந்தார் அவளது கணவர் வேறு யாரும் இல்லை....

கவிதா கார்த்திக் இருவரும் காதலிக்கும் பொழுது கவிதா அடிக்கடி கார்த்திக்கிடம் " என்னை ரொம்ப நாளா வீட்டு பக்கத்துல ஒரு பையன் என் பின்னாடியே சுத்துறான் " என்றால் ..அதை கேட்ட கார்த்திக் அவனை பார்த்து அவள் என்னுடைய காதலி தயவு செய்து பின்னல் சுற்றாதே என்றான் அவனும் " மன்னிக்கவும் தெரியாது இனி இது போல் நடக்காது என்றான் அவன் தான் இன்று கவிதாவின் கணவன் "

என்னங்க ரொம்ப நீளமா இருக்கா ?

இதுல சொல்ல வர்ற கருத்து சின்னது தாங்க
யார் யார் க்கு ..
யார் யார் என்று தீர்மானிப்பது நாமல்ல ...

இறைவன் ........

இந்த மூன்று பேரும் கண்டிப்பா உணமையாதா காதலிச்சாங்க ஆனா விதி ?
அவளுக்கு பிடிச்சவன அவளுக்கு பிடிக்கல..
அவளுக்கு பிடிச்சவன அவளால கல்யாணம் பண்ண முடியல...
காதலிக்காதவன கல்யாணம் பண்ணாம இருக்க முடியல....
உண்மையாவே பலரோட வாழ்க்கைல இந்தமாதிரிதாங்க நாம நினைக்காதத கடவுள் நம்ம கைல கொண்டுவது கொடுக்கிறது ....

வாழ்க்கை ஒருமுறைதான் இதில்...
இதுதான் வாழ்க்கை என்று நினைத்து இருந்து விடாதே...

முடிவில்லா கடலின் ஆழம் உண்டு...
முடிவு தெரியாமல் முடிந்து போன வாழ்க்கையும் உண்டு.....

முடிவு

எழுதியவர் : சாமுவேல் (1-Jan-14, 1:08 pm)
பார்வை : 230

மேலே