பிறந்தமண்ணில் ஒரு நாள்
பனித்திரை முழுதாய்
விலகாத அதிகாலைப் பொழுது
குளிர் உயிரின்
வேர் வரை பரவ
பச்சை பசேலென்ற
வயல் வெளி
விழிகளுக்கு விருந்திட
பசியால் சத்தமிட்ட என்
இரைப்பையும் தன்னை மறந்தது
பிறந்த மண்ணில்
பாதம் பட
புதிதாய்
புத்தம் புதிதாய்
பூத்தது மனம்
உணர்ந்த சிலிர்ப்பை
உரைத்திட வார்த்தைகள்
என் நாவிலும் விரலிலும்
தந்தியடித்த போதிலும்
மீண்டும்
இயந்திர வாழ்க்கைக்குள்
இழுக்கப்பட்ட வாழ்க்கையில்
மனம்
தந்தியடித்தே
தந்தியடிக்கிறது ..........