மயூசேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மயூசேகர்
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  29-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Dec-2013
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  11

என் படைப்புகள்
மயூசேகர் செய்திகள்
மயூசேகர் - மயூசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2014 5:16 pm

நல்லவன் எனும்
போர்வை நீக்கி
நாகரீக உடை களைந்து
உள் மனதின் உண்மையினை
அம்மணமாய் முன் நிறுத்தி
அழகாய் அலங்கரித்துக் கொள்ள ஓர்
அருமையான வாய்ப்பு....

மேலும்

நன்றி நண்பர்களே.... 06-Mar-2014 3:10 pm
நன்று! 04-Mar-2014 12:34 am
மீள் பார்வையின் நேரம் . நன்று 03-Mar-2014 7:08 pm
மயூசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2014 5:16 pm

நல்லவன் எனும்
போர்வை நீக்கி
நாகரீக உடை களைந்து
உள் மனதின் உண்மையினை
அம்மணமாய் முன் நிறுத்தி
அழகாய் அலங்கரித்துக் கொள்ள ஓர்
அருமையான வாய்ப்பு....

மேலும்

நன்றி நண்பர்களே.... 06-Mar-2014 3:10 pm
நன்று! 04-Mar-2014 12:34 am
மீள் பார்வையின் நேரம் . நன்று 03-Mar-2014 7:08 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) சுடலைமணி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jan-2014 1:37 pm

சிந்திப்போம்
============

பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....

எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....

காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…

சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…

சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய

மேலும்

நன்றி ஐயா :) 10-Nov-2014 1:01 pm
சாப்பிடும் முன் நன்றி சொல்லி தெய்வத்தை வணங்கிடுவர் சிலர்.. ஆனால் அனைவருமே சிந்திக்க வேண்டியதை சொல்லும் கவிதை ..அருமை! 10-Nov-2014 12:53 pm
நன்றி தோழரே 28-Mar-2014 2:05 pm
"சிந்திப்பீர் உண்ணுமுன்னே இல்லாதோர் நிலைமையினை சிந்தனையில் நினைத்திடுவீர் நம்மை விட தாழ்ந்தவரை..." இல்லாதோர் நிலையை நினைவூட்டுகிரது உங்கள் வரிகளும், வலிகளும். 28-Mar-2014 12:50 pm
மயூசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2014 12:43 pm

சிறுவர்கள் உப்பு மூட்டை
விளையாடுவதை பார்த்ததும்
ஆசைப்பட்டு என்னிடம் கேட்டாய்
அன்றிலிருந்து தவறாமல்
தினமும் இனிப்பு வாங்கிக்கொடுக்கிறேன்
அந்தச் சிறுவர்களுக்கு.....

மேலும்

மழையில் நனையாமல்..! 16-Jan-2014 12:52 am
இந்த அம்மாவை ஏன் சுமக்கிறார் மனிதர். 15-Jan-2014 1:10 pm
மயூசேகர் - மயூசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 1:29 pm

முதன்முதலாய் என்னை
அணைத்தவளும் அவளே
முதன்முதலாய் என்னை
முத்தமிட்டவளும் அவளே...

ஆறாத்துயர் கூட
ஆறும் அவள் மடியில்
ஆறுதல் தேடும்போதெல்லாம்
அவள் மடியே தலையணையாய்...

தீராத சோகமெல்லாம்
தீர்க்கும் அவள் புன்னகை
தோல்விகளை எல்லாம்
தோற்கடிக்கும் அவள் தோழ்கள்...

உயரங்களை நான் கடக்க
துயரங்களில் துணை நிற்கும்
தூய்மையான நட்பவள்...

உயிர் கொடுத்து
உலகிற்கு அறிமுகம் செய்து
உன்னை தாய் என்று சொல்வதில்
பெருமைப்பட வைத்தவளே
உன் அன்பொன்று போதும்
என்னுயிர் பிரியும் வரை
இந்த உலகில் நான் ஜெயிக்க....

மேலும்

அன்பிற்கு நன்றி.. 10-Jan-2014 4:18 pm
அருமை நண்பரே..........!! 05-Jan-2014 4:13 am
அன்பிற்கு நன்றி... 02-Jan-2014 11:27 am
உண்மை... அதற்கு அடிமை நான்... 02-Jan-2014 11:27 am
மயூசேகர் - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2013 10:40 am

==பூமி==

இருபத்தி மூன்றரை
சாய்வு கோணத்தில்
பரதமாடும் பெண்...!!!

பரதத்தின் பாத சுவடுகள்
நீள்வட்ட கோலம்..!!!


==நிலா==

சுழல் ஆணியின்றி
அந்தரத்தில்
சுழலும் பம்பரம்..!!!

கதிரவனின் கதிரொளியை
குளிர்விக்கும்
கோல குளிர்விப்பான்..!!!

தினகரனை பூமிக்கு
எதிரொளிக்கும்
பாதரச கண்ணாடி ..!!!

==வானம்==

கணக்கில்லா உயிர்கோலங்களை
உள்ளடக்கிய
எல்லையில்லா அமேசான் காடு..!!!

பகலவன் ஒளிக் கீற்றில்
வேய்ந்த
நீலக் கற்பனைக் கூரை ...!!!

ராகத்தோடு பூமியின் தாகம்
தணிக்கும்
மேகக் குடங்களின் தோட்டம் ...!!!

==வானவில்==

திரவ தேகத்தை சிதைத்து
கார்மேகமது
சிந்துகிறது திரவ முத்தை

மேலும்

மீண்டும் படித்தேன். அருமையான படைப்பு. இயற்கையை அற்புதமாகப் ப்டம் பிடித்துள்ளீர்கள் 01-Feb-2014 4:50 am
வாழ்க வளர்க! 01-Feb-2014 2:23 am
தோழி வருகைக்கு வணக்கம்..!!! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி தோழி.!!! 31-Jan-2014 6:37 pm
தோழ வருகைக்கு வணக்கம்..!!! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி தோழ.!!! 31-Jan-2014 6:37 pm
மயூசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2013 10:18 am

வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்....
காலங்கள் மாறி
கனவுகள் தொலைந்தபோதும்
பாதைகள் மாறி
பயனங்கள் நின்றபோதும்
ஏமாற்றங்கள் எக்காளமிட்டு
ஏக்கங்களை அழைத்தபோதும்
விதவிதமாய் வரைந்துவைத்த நாட்கள்
வெற்றுக்காகிதமானபோதும்
துரோகங்களின் துணையோடு
தூக்கிவிட்ட அவமானங்களிலும்
அரைசான் வயிற்றிற்கு எதுவும் புரியவில்லை
அதனால்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்....

மேலும்

அன்புக்கு மிக்க நன்றி.... 01-Jan-2014 11:41 am
அன்புக்கு மிக்க நன்றி.... என் தனிமைக்கு துனை நிற்கும் எழுத்தை நட்பாய் பகிர்வதில் மகிழ்ச்சிதான்.. என்றும் நட்புடன்.... 01-Jan-2014 11:40 am
எழுத்தில் இணைந்த நட்பே வருக..! உங்கள் முதல் பதிவு மிகவும் நன்று..! தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..! என்றும் எழுத்தில் நட்புடன் குமரி 29-Dec-2013 11:11 pm
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன் சிறப்பு :) 25-Dec-2013 11:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

பிரபலமான எண்ணங்கள்

மேலே