ஒரு வார்த்தை வேண்டும்

கரும்பு போல இனிக்கும் உன்னை :
எறும்பு போல சுற்றி வரும் :
குறும்பு கார காதலன் நானடி ......!

அரும்பு போல உன் சிரிப்பால் ,
விரும்பி வந்தேன் உன் பின்னால்,
விலகி போக ஆசை இல்லையடி !

உன் ஒற்றை வார்த்தை கேக்கத்தான்
தினமும் உன்னை பாக்கத்தான்
என் விழிகள் கூட உன்னை சுற்றுதடி..!

காற்றும் கவிதை சொல்லுமே
உன் பெயரைச சொல்லி துள்ளுமே
ஆசை என்னை அள்ளுமே..
ஆர்வம் என்னை கொல்லுமே
உன்னையும் என் அன்பு வெல்லுமே!

எழுதியவர் : ஜெகன் (1-Jan-14, 2:26 pm)
Tanglish : oru vaarthai vENtum
பார்வை : 114

மேலே