ஏதும் இல்லை என்பவன் - மனம் இருப்பதை மறந்து விட்டானே

இதோ மனிதனின் மனிதநேயம்

மறக்கப்பட்ட மனிதநேயம் மனமிருந்தால்
மறுபடியும் மண்ணில் மலரும் !!

தன் நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும்
என்ற எண்ணம்
ஏன் மற்ற நாலு பேருக்கு உதவ
மனம் வருவதில்லை !! - காரணம்
இங்கே உதவி கூட கடன் தான்
அவன் பார்வையில் !!

அட உதவாவிட்டாலும் பரவாயில்லை
மதிக்க கூடவா மனம் இல்லை !!

இதை விட வேடிக்கை என்ன வென்றால்
உதவி செய்ய செல்பவனிடம்
உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்கிறான்!!

இதோ அவன் பார்த்து செல்வது
வயறு எறிய கதறும் ஒரு குழந்தையை
பார்வை பட்டும் படாதவன் போல் செல்கிறான் !!
அவன் தேடி செல்வது
ஒரு கோப்பை மதுவை தான் !!

ஓர் குழந்தை கண்ணீருக்கு
இரக்கம் கொள்ளா இந்த இதயம்
இன்பம் பெறுவது மதுவில்தானா !!

ஆனால் வெளியே சொல்கிறான்
தான் மட்டும்
இரக்கம் கொண்டவன் என்று !!

கொடுக்க மனம் இல்லாத
இவன் சொல்கிறான் !!
இல்லாமல் இருப்பது
அவனவன் தலைவிதியாம் !

ஏன் என கேட்டால் !!
தனக்கே ஏதும் இல்லை
பின் எப்படி
பிறருக்கு கொடுக்க முடியும் என்கிறான் !

ஏதும் இல்லை என்பவன் தன்னிடம்
மனம் இருப்பதை மறந்து விட்டானே !!

எல்லோருக்கும் நீ உதவ வேண்டும்
என நிர்பந்தம் இல்லை !!

ஒருவருக்காவது உதவினால் - அவன்
உள்ளம் மட்டும் அல்ல - உன்
இதயமும் இன்பம் பெறும் !!

எதை எதையோ செய்யும் நாம்
ஏன் இப்படி உதவி செய்ய
மட்டும் மறுக்கிறோம் !!

மனிதநேயம் மண்ணில் புதைந்துவிட்டதா !!
இதோ விதைத்து கொண்டிருகிறேன்
புதைக்கப்பட்ட இடத்தையும் சேர்த்து !!
மீண்டும் மலரும் மனிதநேயம் !!


----மனிதநேயம் தேடி என் பயணம் - தனிமையில்----

எழுதியவர் : (இராஜ்குமார் Ycantu) (2-Jan-14, 1:13 pm)
பார்வை : 308

மேலே