காதல் TECH
மனம் இருந்தால் மார்கமுண்டு,
ஆசிரியரிடம் கற்றது,
பணம் இருந்தால் தான் காதலுண்டு,
உன் வார்த்தை சுட்டது.
இன்னா நாற்பது இனியவை நாற்பது படித்திருக்கிறேன்,
ஆனால், நீ விரும்பும் இனியவைகளின் விலையோ
ஆயிரம் ஆயிரம்!...
உன் நினைவுகள் வளர்பிறையாய் இருப்பதாலோ,
தேய்கின்றன என் ATM cards,
நிலவாக சித்தரிதேன் உன்னை,
அதனாலோ,
நீ மிதக்கிறாய் வானத்தில்,
நான் மூழ்குகிறேன் கடனில்!...