ஏன் அணுகுண்டு

அணு குண்டை உருவாக்க நாடுகள் பல
பணத்தினை பாதாளம் வரை பதுக்குகிறது
அது ஏன் பசி போக்க மறுக்கிறது
மனிதனை காக்க வழி தேடவில்லை
உலகை அழித்துவிட குழி வெட்டுகிறது

மனிதனை காக்க அமைப்புகள் பல
காக்கும் எண்ணங்கள்தான் இல்லை -அதற்க்கு
சமாதானத்தை விரும்பும் உலகுக்கு
ஏன் இந்த பாரிய அணுகுண்டு

குண்டு போடும் பணத்திற்க்கு
உணவை போடுங்கள்
பசி இல்லாத உலகம் இருக்கும்
பகை இல்லாத நாடு பெருகும்

துன்பம் துளைந்து விடும்
அன்புமட்டும் ஆட்சி புரியும்
கடவுளை தேடும் பணிமுடியும்
இந்த பூமி சுவர்க்கம் என்பதை
அறிவாய் மனிதா

எழுதியவர் : அதிவீரன் .கா (4-Jan-14, 9:35 am)
Tanglish : aen anukundu
பார்வை : 103

மேலே