ஓடுகிறாயா உறங்குகிறாயா

உண்மையை சொல்லவேண்டிய காலம்...
உறங்கியதும் மாறுகிறது நேரம் ....

பிறந்த உடன் உறங்கச் சொன்னாள் 23 மணி நேரம்..
பிறவி எடுத்தால் ஒருநாள் உறங்க நேரிடும் முழு நேரம்....

இவை இரண்டிற்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை காலம் ....
இதை அறியாமல் உறங்குபவனே நான் சொல்வதை கேள் கொஞ்ச நேரம்...

நித்தம் நீ உறங்கினால் சோம்பேறி என்பான் ...
நித்திரை இல்லாமல் இருந்தால் நிம்மதி இல்லையா என்பான் ...

பருவத்தில் நித்திரை இல்லை என்றால் காதலா என்பான்..
பாதையில் நித்திரை என்றால் போதையோ என்பான்...

வேலையில் உறங்கினால் நியாயமா என்பான்....
வேலை இல்லாமல் உறங்கினால் வெட்டி வேலை என்பான் ....

மணம் முடிந்தப்பின் உறக்கம் எதுக்கடா என்பான்...
மணம் முடிந்ததால் உறக்கம் போனது என்பான்...

உறக்கம் இல்லாமல் அலைகிறார் பிள்ளைகளுக்காக என்பான் ....
பிள்ளைகளை பெற்றெடுத்தாள் உறக்கம் போனது என்பான்...

உறவு இழந்து நிற்கிறேன் உறக்கம் வர வில்லை என்பான் ...
என்வேலை முடிந்தது உறங்கி ஓய்வு எடுக்க போகிறேன் என்பான் ...

நித்திரைக்கு விளக்கம் வேண்டும் ...
அதற்க்கு விளக்கம் இல்லாமல் நீ ஓய்வு எடுத்தால் உன் வாழ்வில் என்றும் சோகம் .

எந்த நித்திரை உன்னை தழுவுகிறது ..
நினைத்து பார்...
எந்த நித்திரையில் நீ இருக்காய் நினைத்து பார்...

ஓய்வெடுக்கும் நேரத்தில் ஓடும் நித்திரையா..
இல்லை ஓடுவதால் கிடைக்கபோகும் நித்திரையா..

ஓடுகிறாயா ?
உறங்குகிறாயா...?

எழுதியவர் : சாமுவேல் (4-Jan-14, 1:49 pm)
பார்வை : 105

மேலே