விபத்தால் மரணம்
அயராது உழைத்து
ஆசையில் எடுத்தோம் வண்டி
அரசாங்கத்தின் வேகம் மீறி
அம்பாய் பாயுது வண்டி !
இரண்டு சக்கரம் நான்கு சக்கரம்
நம் தகுதிக்கு வேண்டும் வாகனம்
பாதையில் மட்டும் கவனம் இருந்தால்
பயணம் எளிதாய் முடியுது !
பயம் அறியாமல் பறக்கும் போது
பாதியில் வாழ்வு அழியுது
நம்மை சுமந்த நல் வாகனம்
நம் கதை முடித்து நின்றது
நாம் சுமந்த குடும்ப பாரம்
இனி யார் சுமந்து செல்வது !
நவீனமாக எமனின் வாகனம்
நான்கு திசையும் ஓடுது
நாம் வீழ்ந்து சாகும் போது
நான்கு தோள்கள் தாங்குது !
மலை போன்ற கனவில் இருந்த
மாமிச உடல் போகுது
மலர்கள் தூவி
மலர் வளையம் மேவி
மவுனமாக போகுது !
உற்றார் உறவு ஒன்றாய் கூடி
ஒரு நாள் மட்டும் அழுகுது
ஒருவருக்கொருவர்
அவன் புகழ் பேசி காடு வரையில் செல்வது
இயற்கை மரணம்
இறைவன் வகுத்தது
இளமை மரணம்
விபத்து கொடுப்பது
இருக்கும் மனிதா
பகுத்து பார் இதை
இனி பயணத்தை
விழித்து பார்த்திடு
இரவு பயணத்தை
இன்றுடன் முடித்திடு
பகல் பயணம்
பார்த்து சென்றிடு
பாதையில் எமனை
விலக்கி ஒட்டிடு
வாகனப் பயணம்
வலி இல்லை உணர்ந்திடு !!!