தேவையா காதல்

மனமே மனமே மயங்காதே
காதல் மனதை மயக்கும் கலைதானே
சிலைகள் காற்றில் கரையுமென்றால்
காதல் கலையும் ஒரு நாள் அழியுமென்பென்

சிறகுகள் என்றும் சுமையில்லை
சிந்தனைக்கு என்றும் தடையுமில்லை
உயிரை உருக்கும் கனவுகளுக்கு
என் மனதில் இடமுமில்லை

கவலைக்கு மனத்தால் கரு தந்து
கண்ணுக்கு முன்னாள் உருவம் தந்து
அதனால் முழுதும் கவலை கொண்டு
வாழும் வாழ்க்கை நமகெதர்க்கு

கண்களால் களவு செய்து
இதயத்தை தொலைக்கும் காதலுக்கு
முடிவுரை எழுதிடும் முயற்சி கொண்டு
மனதில் எழுந்த கவிதை இது

எழுதியவர் : ருத்ரன் (4-Jan-14, 5:05 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 86

மேலே