திருவிழா தேவதைகள்

கடவுள் இருப்பதற்கு
ஆதாரம் என்ன?
மனிதன் ஜீன்களின் உற்பத்தியே தவிர
கடவுளின் படைப்பல்ல.

உங்க கடவுளுக்க்குக்
கண்ணிருந்தால்
கெட்டவர்களை
அழிக்க வேண்டியது தானே!
நன்றாகவே பேசினேன்
நாத்திகம்.


ஆனாலும்
குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே
ஓரக்கண்ணில்
உழவு செய்யும்
சிவப்புத் தாவணி கட்டிய
தேவதைகளுக்க்காகவே
சீக்கிரம்
வர வேண்டும்
மாரியம்மன் திருவிழா.

எழுதியவர் : சதீஷ்குமார்(கவியன்பு (5-Jan-14, 9:15 pm)
பார்வை : 80

மேலே