புத்த மொழி விழியாளே

கொல்லாமை எனும்
கொள்கை கொண்ட
புத்தமொழி விழியாளே...!
எனை நித்தம்
கொன்று குவிப்பதேன்...?
கூரிய உன் விழியாலே...???
அரபிமொழி போல
அறியாமல் முழிக்கின்றேன்...
அமுதமொழி
தமிழ்மொழியாய்
அரவணைக்க வருவாயா...?
இல்லை,
ஆப்பு தந்தே செல்வாயா....???