எமனாய் முளைத்தாளோ

நீலப் பட்டாடை நிறையக் கட்டி
நெற்றியில் நிலவுப் பொட்டுமிட்டு
சாலப் பொன்மணி அணிகள் பூட்டி
சாடை என்ன செய்தாள் சிமிட்டி.

நீளும் இரவவள் நித்திரை கலைத்தாள்.
ஆளும் என்மனம் அவள்வசம் அழைத்தாள்.
நாளும் உறவவள் பற்றிட வைத்தாள்
வாழும் தீவனம் நான்பட வளர்த்தாள்.

எரியும் எனக்குள் இதயம் உண்டே:
சிரிக்கி அதற்குள் இருப்பதும் கண்டே:
ஐயோ அவளும் துடிப்பாள் அன்றோ!
பொய்கை விழுந்தேன் குளிர்வாள் என்றே!

எனக்கென எமனாய் ஏன் முளைத்தாளோ!
எனக்குள் எவ்விதம் அவள் நுழைந்தாளோ!
கணக்கென்ன இறைவன் தான் கணித்தாலும்
கனக்காதென் மனம் சுமப்பேன் நாளும்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (6-Jan-14, 12:38 am)
பார்வை : 162

மேலே