பொங்கல் தமிழ் இசைப்பாடல்

பொங்கல் (தமிழ் இசைப்பாடல்)
பல்லவி
தைய… தைய… தைய… தைய… தை
சூரியனைக் கும்பிடச் சொல்லி
தமிழ்ப் பொங்கலும் வந்ததம்மா
தைப் பொங்கலும் வந்ததம்மா
நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சிப் பொங்குதம்மா
நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சிப் பொங்குதம்மா
சரணம்
வீதியையும் வீட்டையும் சுத்தம் செஞ்சு
போகிக் கொண்டாடு…. போகிக் கொண்டாடு
பழசெல்லாம் போக்கிக் கொண்டாடு
குப்பையெல்லாம் போக்கிக் கொண்டாடு
நாடே சுத்தமாகும் போகிக் கொண்டாடு
நாடே சுத்தமாகும் போகிக் கொண்டாடு
( தைய… தைய…)
நமக்கெல்லாம் பூமி தான் சாமி
பூமிக்கெல்லாம் சூரியன் தான் சாமி
தைமுதல் நாளிலே பொங்கல பொங்க வைச்சு
சூரியனுக்கு நீ காமி சூரியனுக்கு நீ காமி
( தைய… தைய…)
மாடுன்னா செல்வமுன்னு வள்ளுவர் சொன்னாரு
ஆடு மாட்ட மதிக்கச் சொன்னாரு
மாட்டைக் குளிப்பாட்டு மாட்டைக் கொண்டாடு
மாட்டுப் பொங்கல் வை மாட்டுக்குப் பொங்கல் ஊட்டு
மாட்டை மதிக்கச் சொல்லுது தமிழ்ப் பண்பாடு
மாட்டை மதிக்கச் சொல்லுது தமிழ்ப் பண்பாடு
( தைய… தைய…)

அங்கே பாரு ஜல்லிக்கட்டு
காளைகள் வருது துள்ளிக்கிட்டு
நீ காளையோடு மல்லுக்கட்டு
நீ காளையோடு மல்லுக்கட்டு
( தைய… தைய…)

ஊரு உறவெல்லாம் ஒன்னா சேருங்கம்மா
ஆனந்தம்மா ஆடுங்கம்மா ஆனந்தம்மா பாடுங்கம்மா
அதுதான் காணும் பொங்கல்லம்மா
வாழ்வில் இன்பம் காணும் பொங்கல்லம்மா
வாழ்வில் இன்பம் காணும் பொங்கல்லம்மா
( தைய… தைய…)

இரும்பாட்டம் உடம்ப வை கரும்பாட்டம் மனச வை
ஊருக்கே உரக்கச் சொல்லித் தமிழ்ப் பண் பாடு தமிழ்ப் பண் பாடு
இதுதான் தமிழ்ப் பண்பாடு இதுதான் தமிழ்ப் பண்பாடு
( தைய… தைய…)

எழுதியவர் : damodarakannan (7-Jan-14, 9:47 am)
பார்வை : 177

மேலே