பெற்ற தாய்

அன்பை மறந்தார்கள்
வயதை மறந்தார்கள்
இயலாமையை எண்ணவில்லை
கைமையை எண்ணவில்லை
பொருட்டாகக் கருதவில்லை
உயிருள்ளவளாகக் கருதவில்லை
பெருமையுடன் வாழ்ந்தா தாய்
இன்று தேடுவாறின்றி
அலக்கழிக்கப் படுகிறா ள்
அங்கும் இங்குமாக
மகன்களுக்கும் மகளுக்கும் நடுவில்
திகைத்து நிற்கிறாள்
பெற்ற பிள் ளை களைப் பார்த்து
பின் தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறாள்
பிளைகளா அல்லது பிழைகளா என்று

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (6-Jan-14, 7:55 pm)
பார்வை : 2005

மேலே