உயிர் நீ

உளியை இழந்த
சிற்பி போல ;

வாசம் பிரிந்த
மலரைப் போல ;

வானம் மறைத்த
நிலவைப் போல ;

புயல் வந்தடித்த
பயிரைப் போல ;

மனம் வாடிக்
கிடக்கின்றேன் ..........

தாயே ! உன்னைப் பிரிந்தத்
துயரத்திலே ......

மீண்டும் வருமா விடுமுறை
உன்னை நான் காண என்று
நாட்களைக் கழிக்கின்றேன் !

எழுதியவர் : dharshan (7-Jan-14, 3:50 pm)
பார்வை : 74

மேலே