இப்படித்தான் உணவோடு காதலாம் ஏழையின் வயிற்றுக்கு -- கண்ணன்
கனவோடு வருகின்றாய்
நினைவெல்லாம் நிறைக்கின்றாய்
கண் பார்க்கும் இடம் எல்லாம்
பெருங் காட்சி தருகின்றாய்..!!
கடைவீதி நடை பொழுதில்
கானல் நீர் ஆகின்றாய்..
புகைப்பட காட்சிகளில்
மனம் உடையச் செய்கின்றாய்..!!
வாசப் பாதச் சுவடுகளில்
உயிர் இழுத்துச் செல்கின்றாய்..
எனக்காய் வரும் தருணத்தில்
பார் மறைத்து நிற்கின்றாய்..!!
வருகை இல்லா இரவுகளில்
துயில் இழக்கச் செகின்றாய்..
வறுமைக் கோட்டின் வாயிலிலே
காத்து நிற்கச் செய்கின்றாய்..!!
இப்படித்தான்..
உணவோடு காதலாம்
ஏழையின் வயிற்றுக்கு..!!