கனவுக் காலங்கள்

தரிசு வெளிகளில் தும்பி கலைத்து
வாய்கால் நீரில் மீன் பிடித்து
குஞ்சுக் குளத்தில் நீச்சல் கற்று
பள்ளிக்கு கள்ளமடித்து பந்தடித்து
தென்னங் குரும்பைகளில் தேர் கட்டி இழுத்து
மணல் வீடு கட்டி மண் சோறாக்கி
கள்ளமில்லா வண்ணக் கனவில்
எண்ணம் தொலைத்து
சிட்டுக்களாய் சிறகடித்துப்
பறந்த காலங்களே!
ஒரே ஒரு முறையாவது
திரும்பி வரமாட்டீர்களா?

எழுதியவர் : வளவன் (9-Jan-14, 9:36 am)
சேர்த்தது : valavan2000
Tanglish : kanavuk kaalangal
பார்வை : 81

மேலே