நீங்கள் சொல்லுங்கள்

தோரண பந்தலின் கீழ்
ஆரணங்கள் மறையோர் ஓத
சீர் மிகு செல்வனின் கரம் பிடித்து
சென்றிடும் மணப்பெண்ணே !!

ஏழையின் கரம் பிடித்தால்
ஏழ்மை நிலையென எண்ணி
செல்வத்தின் கரம் பிடித்து உன்னை
நீங்கா சிறை அடைத்தாயோ ...!!

பாரெல்லாம் சுற்றினாலும் நீ
பாமர பெண்ணே!!
கூண்டுகிளியென வாழ்வது வாழ்வா
கூலினை குடித்தாலும் தன்மானம் பெரிதே!

இனி ஒரு விதி செய்தேனும்
வீழ்ந்திடாதிருத்தல் நன்று
ஆம் என்னும் பெற்றோர் ஆசைக்கிணங்கி
பாம்பினை தொடுத்தாய் மாலை!

உனக்கென மனமிருந்தும்
உறக்கமின்றி தவிக்கிறாயே!!
ஆறறிவு பெற்றும் மதியின்றி
கோ ஆசையினாலே...

எருதினை போல் உழைத்திடவே
சதி செய்தே உனை மணமுடிப்பான்
ஏழ்மை மீது இரக்கம் உண்டென
பாசாங்கு செய்தே உனை வீழ்த்தினான்

பத்திரை தங்கமடி
பதராகி போனாயடி
பாவையே நீ என்ன பாராங்கல்லோ
இத்தனை சுமைகளை தாங்கி நிற்க

பெற்றவன் கடன் முடிக்க
வைத்தானோ அடகு
பிள்ளை செல்வம் பெறாமல்
முழுமை பெறாதோ வாழ்வு

அத்துனை துயரினும்
உனை பெற்றவர்
பெருமைகுரியோரோ!!
எத்தனை மேன்மை
நிறைந்தது இந்த பெண்மை....!!

எழுதியவர் : kanagarathinam (11-Jan-14, 2:47 am)
Tanglish : neengal sollungal
பார்வை : 140

மேலே