நவீன பொங்கல்

வீடெங்கும் வெள்ளை அடித்து
வீதி எங்கும் கோலமிட்டு
வாசலில் காவியடித்து
விடியும் முன் கண்விழித்து
முற்றத்தில் அடுப்பு வைத்து
பொங்கலோ பொங்கலென
ஆசையுடன் குதூகலித்த
காலம் காலமாகி

வழக்கம் போல் கண்விழித்து
வீட்டு அடுப்பில் பொங்கல் வைத்து
விரல்கள் தொலை இயக்கியில் தாளமிட்டு
அலைவரிசையை மாற்றிட
கண்கள் தொலைக்காட்சியில் தொலைந்திட சூரியனை வணங்கும் நன்னாளில்
சூரிய குழும தொலைக்காட்சியில் ஒன்றி
புத்தகக் கண்காட்சியுடன் விடை பெறுகிறது

எழுதியவர் : kamalammanian (11-Jan-14, 5:13 pm)
Tanglish : naveena pongal
பார்வை : 581

மேலே