வான சாகரத்தில்
![](https://eluthu.com/images/loading.gif)
பரந்த வான சாகரத்தில்
பகலெல்லாம் பரிதி நீந்தும் ...!!
.
விடியும் வரை இரவெல்லாம்
விண்மீன்புடைசூழ நிலவு நீந்தும் ...!!
மேகஅலைகளுள் முங்கி ஆடும்
மேனிமறைத்து ஒளிந்து ஓடும் ....!!
நீடித்தஆயுள் நீச்சல் பயிற்சியால்
நீலவானில் அழிவின்றி நிலைத்ததோ ...?
ஞாயிறுதிங்களும் தம்பணி செய்யும்
ஞாலம்சிறப்புற ஒளியும் கொடுக்கும் ....!!