நிலைத் தகவல்கள்-கே-எஸ்-கலை

புத்தன் அமர்ந்ததால்
அரசமரம் போதிமரமானது...
இப்போது
“புத்தர்கள்” அமர்த்தப்படுவதால்
போதிமரங்கள்
“அரச”மரமாகின்றது!
--------------- ஞான சூன்யம் !
========
உலகிலேயே
மிகப் பெரிய செல்வந்தன்
யாரென கணக்கெடுக்க முடிந்தாலும்,
மிகப் பெரிய வறியவன் யாரென
கணக்கெடுக்க முடிவதில்லை
ஏனெனில்
உலகம் வறியவர்களை
கணக்கெடுக்காது !
--------------- யதார்த்தம்
========
சிலருக்கு காதல்
வாழையிலைப் போன்றது...
காமம் என்ற உணவை
உண்டபின் - இலையை
போட வேண்டிய இடத்தில்
போட்டுவிடுகிறார்கள் !
--------------- “நவீன மாயம்”
========
சந்தோசத்தை தேடுவதால் தான்
பல பிரச்சினைகள் பல்கிப் பெருகுகிறது
சனத்தொகை உட்பட !
========
மனிதர்களையும் மனிதத்தையும்
இறுக்கமாய் கட்டிப்போடும் பெருங்கயிறு
மதம் – ஆகவே மதம் ஒழிக !
========
விரல்களும் மூளையும் இதயமும்
ஆயுதப் பூஜைக்கு வைக்கலாமா என்றேன்...
அறிவுகெட்டவன் என்றார்கள் !
========
எல்லோருக்கும்
சொர்க்கம் போக ஆசை
யாருக்கு
செத்துப் போக ஆசை?
========
நம்பிக்கை உள்ளவன்
நாசாவுக்குப் போகிறான்
நம்பிக்கை இல்லாதவன்
நாசமாய்ப் போகிறான் !
--------பஞ்சி டைலாக்கு --- ஹீஹி
========
இவை அவ்வப்போது முகநூலில் நான் எழுதிய நிலைத் தகவல்கள்
(கவிதையல்ல)