மரண விசாரணை வேண்டும்

உடலில் ஊரும்
உயிரும் ஓர் நாள்
உண்மை உணர்த்தும்
மரணம் அதனை
சொல்லிடவே நின்று விடும்
இன்று உறைந்திருக்கும்
வனப்போடு
வேகமாய்
ஓடிக் கொண்டிருந்த
நயாகாரவைப் போல !
மனிதன் மரணித்தால்
மரண விசாரணை
நயாகரா இறந்ததிற்கு
என்ன விசாரணை ?