அம்மா எனும் அலறல் சத்தம்
மருத்துவமனை
சாய்விருக்கையில் வெளியே நீ.
உள்ளே
உன் மனைவி.
அம்மா
எனும் அலறல் சத்தம்
நீயும்
தொட்டதால் பெற்ற பலன்.
நீ இங்கே
கை நகம் கடித்து
அவள்
ஊண் உயிர் துடி துடித்து
கேட்கிறதா
உன் காதில் தீயாய்
கொஞ்சம் யோசியடா நீயாய்
நீதானே
ஆரோகித்தாய் நேற்றிரவு
உன் தந்தை பெயர்
வைக்க வேணும் உறவு
பெண் என்ன
ஆணுக்கிங்கு என்ன குறைவு
உன் தாய்
பெயர் வைக்க வந்தால் அது நிலவு
பெண்
வேண்டாம் என்று சொல்லும் குணம்
நிறுத்தப் பழகு.
இனிமேலும்
அடம் பிடிப்பின்
சம்சாரமே வேண்டாமடா
நீ போ துறவு . . . .