41 பிறர்சொல்லி வருவதில்லை மாற்றம்
சொந்தக் கவிதை -41
என்னைச்சார்ந்தவர்களை என்எண்ணப்படி
மாற்றிவிடலாம் எனஎண்ணி
ஆண்டுகள்பல முயற்சித்தேன்
ஒன்றுமேநடக்கவில்லை ஏமாந்து
வெறுப்படைந்ததுதான் மிச்சம்.
மாற்றும்எண்ணம் உள்ளத்தில்தங்கியதால்
என்னையேநான் மாற்றமுடிவுசெய்தேன்
மற்றவர்களைமாற்றும் எண்ணம்மறந்து
என்னையே நான்மாற்றிக்கொண்டேன்
என்ன ஆச்சரியம் என்னைச்சார்ந்தவர்களிடம்
நான்எதிர்பார்த்த மாற்றம்தானேவந்ததுவே.
ஒன்றை புரிந்துக்கொண்டேன்
மாறுவதும் மாற்றநினைப்பதும்
பிறர்சொல்லி வருவதில்லை
தான்உணர்ந்தால் மட்டுமேவருவதுமாற்றம்