காவல் நாயகியே காதல் நாயகியே

விழிகளால் விலங்கிட்டு
கைது செய்தாய்
புன்னகையால் கைது செய்து
இதய சிறையிலிட்டாய்
விடுதலை வேண்டாத சிறை
இதுதானே மனிதனுக்கு
காக்கியை பெண்கள் அணியும் முன்னே
கண்களினால் கைது செய்து
நெஞ்சச் சிறையில் அடைக்கும்
கடைமையினை செய்பவளே
நீயே காவல் நாயகி !
நீயே காதல் நாயகி !
நீயே காதல் தேவதை !
நீயே காவல் தேவதை !
~~~கல்பானா பாரதி~~~