ஓர் அழகிய தமிழ் சொர்ர்க்கம் விரிந்திருக்கும்

கள்ளிருக்கும் மலரினில்
தமிழ்த் தேனிருக்கும் உன்னிதழ்களில்
நீரோடைக் குளிரிருக்கும் உன் விழிகளில்
அது பேசும் மௌன மொழிகளில்
என் கவிதை வரிகளில் எல்லாம்
பவழ மல்லி பாய் விரித்திருக்கும்
அந்தி மேற்க்கே சாய்ந்திருக்கும்
அழகு நிலா பூத்திருக்கும்
அந்த ஆரஞ்சு வண்ண மாலைப் பொழுதினிலே
நீ வந்து என் தோளினில் சாய்ந்திடும் போது
என்னருகில் ஓர் அழகிய தமிழ் சொர்க்கம்
விரிந்திருக்கும் .
~~~கல்பனா பாரதி~~~