பண்பாட்டுத் திருவிழா

இயற்கையை ஊனப்படுத்தும்
கந்தகப் புகை எழுப்பாமல்
மாரடைப்பை மலிவாய்த் தரும்
வெடிச் சத்தம் இல்லாமல்
யாரும் மனம் சுளிக்கும்
சிறு இடையூறும் இல்லாமல்
வேளாண்மை செய்து
மானிடர்க்கு உணவளிக்கும்
உழவரைப் போற்றி
ஒளிதந்து உயிர்வாழ
வழிகாட்டும் ஞாயிறைப் போற்றி]
உலகிற்கே பொதுமறை தந்த
வள்ளுவனைப் போற்றி
கொண்டாடும் தமிழர் திருநாள்
பண்பாட்டுத் திருவிழா!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (12-Jan-14, 11:54 am)
பார்வை : 1302

மேலே