+பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்+
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்
பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்
தங்கட்டும் தங்கட்டும் பாசமும் தங்கட்டும்
தங்காமல் போகட்டும் வேசமும் அழிந்தேதான்
சிறக்கட்டும் உழவர்தன் வாழ்க்கையும் சிறக்கட்டும்
சிறப்பான வயற்காடும் செழிப்பாக விளையட்டும்
பரவட்டும் பரவட்டும் சந்தோசம் பரவட்டும்
பரவாமல் போகட்டும் தேள்கொட்டும் ஏழ்மைதான்
போற்றட்டும் புகழட்டும் உலகம்நம் ஒற்றுமையை
போராடும் குணம்கண்டு எதிராளி பதுங்கட்டும்
பறக்கட்டும் புவிஎங்கும் சமாதான கொடிமட்டும்
பறக்காமல் இறக்கட்டும் தீவிரவாத எண்ணம்தான்
திக்கெட்டும் எட்டட்டும் பொங்கலெனும் மகிழ்வோசை
திக்கின்றி அடங்கட்டும் சோகத்தினால் அழும்ஓசை
பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்
பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்